பிரியா பவானி சங்கர் திருமணம் தள்ளிப்போனதற்கான காரணம் – வெளிப்படையாக தகவல் தெரிவிப்பு!

பிரியா பவானி சங்கர் திருமணம் தள்ளி போனது குறித்து தகவல்!

‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘மாபியா’ ‘ஓமணப்பெண்ணே’ போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் அருண்விஜய்யின் ‘யானை’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, ஜெயம்ரவியின் ‘அகிலன்’ எஸ்.ஜே. சூர்யாவின் ‘பொம்மை’ சிம்புவின் ‘பத்து தல’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட ஒரு தொகை படங்களில் நடித்து வருகிறார்.

Priya Bhavani Shankar, Tamil Cinema 02-June-2022

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகை பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என கூறப்படும் நிலையில், தனது காதலரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து, காதலருடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Priya Bhavani Shankar, Tamil Cinema 02-June-2022 001

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நான் கல்லூரி படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்க வாய்ப்புக்கள் அதிகம் வருவதால் திருமணம் தள்ளிப் போய்விட்டது’ என்றும் தெரிவித்துள்ளார்.