முன்னணி நடிகர்களின் படங்களை தெறிக்கவிட்ட லெஜண்ட் சரவணன்!

தி லெஜண்ட்

பிரபல சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் விஞ்ஞானியாக நடிக்கும் சரவணன், தான் படித்த படிப்பும் கண்டுபிடிப்புகளும் ஏழை எளிய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இருக்கிறார். ஆனால் அவருடைய எண்ணத்திற்கும் வில்லன் கூட்டம் தடை போடுகிறது, பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கின்றது. இதனை அவர் எப்படி சமாளித்தார்? என்பதே இந்த படத்தின் கதை.

திரைப்படத்தின் ட்ரைலர் விமர்சனங்களை சந்தித்தாலும் யூடியூப்பில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது தி லெஜண்ட் பட ட்ரைலர் 18 மில்லியன் பார்வைகள் கடந்து, மற்றும் 800 k லைக்ஸ்களை குவித்துள்ளது.

இது முன்னணி தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களான அண்ணாத்த, ET, டான், மாநாடு, மாறன் உள்ளிட்ட படங்களை விட அதிகமாகவுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.