விக்ரம் படம் குறித்து விமர்சனம் செய்த அரசியல் தம்பிக்கு நன்றி தெரிவித்த கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் வரும் 3மஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் முன்பதிவு தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் முன்பதிவில் ரசிகர்கள் காட்டிவரும் ஆர்வத்தை பார்க்கையில் முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிடவுள்ள உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படம் குறித்த முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் “விக்ரம் சூப்பர் என்றும், படம் பிளாக் பஸ்டர் வெற்றியடையும் என்றும்” பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கமல் “உதயநிதி தம்பி என விழித்து, விக்ரம் குறித்த உங்கள் முதல் பார்வைக்கு நன்றி, நீங்கள் எனது ரசிகர் என அறிவித்துள்ளீர்கள். உங்களின் பதிவு எனது மற்ற சகோதரர்களையும் உற்சாகப்படுத்தும்” என பதிலைத்துள்ளார் கமல்.