எஸ்.தாணுவின் அடுத்த முயற்சிக்கு குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சினிமாவின் வெற்றிப்பட தயாரிப்பாளர் சிகரமாக வளம் வரும் கலைப்புலி எஸ்.தாணு எடுத்துள்ள அடுத்த முயற்சிக்கு இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘யார்’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கலைப்புலி எஸ். தாணு. அதை தொடர்ந்து பல வெற்றி படங்களை தயாரித்தார் என்பதும் இவரது தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன்கள் செய்யப்படும் என்பதும் பெரும் எதிர் பார்ப்புக்குரியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தயாரித்த ‘தெறி’, ‘கபாலி’, ‘அசுரன்’, ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ‘நானே வருவேன்’ மற்றும் ‘வாடிவாசல்’ உட்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் ஆம்பூரில் முருகன் – கார்த்திகேயன் என்ற திரையரங்குகளை திறக்கவுள்ளார்.
இதற்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் சுப்பிரமணியம் சிவா கூறுகையில், “கனவுகளை சிந்தனைகளாக்கி, சிந்தனைகளை செயல்களாக்கி, செயல்களை சாதனைகளாக மாற்ற தெரிந்த ஆற்றல் கொண்ட தயாரிப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் எங்கள் கலைப்புலி எஸ். தாணு ஐயா, இன்று அமர்களமாக ஆம்பூரில் துவங்கும் முருகன்-கார்த்திகேயன் திரையரங்கள் மாபெரும் வசூல் சாதனைகள் படைக்க.. திரைத்துறை செழிக்க.. வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
