ரொமான்ஸ் – த்ரில்லருடன் கூடிய எஸ்.ஜே. சூர்யாவின் ‘பொம்மை’ டிரைலர்!

எஸ்.ஜே. சூர்யா நடித்த பொம்மை படத்தின் திரில்லர் டிரைலர்!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் அடுத்த திரைப்படமான ‘பொம்மை’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Bommai, S. J. Surya, Priya Bhavani Shankar, Tamil Cinema 02-June-2022

ராதாமோகன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘பொம்மை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும், பிரியா பவானிசங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டிரைலரை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரொமான்ஸ் மற்றும் த்ரில்லருடன் கூடிய இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Bommai, S. J. Surya, Priya Bhavani Shankar, Tamil Cinema 02-June-2022 001

இந்தப் படத்தின் ட்ரைலரில் ‘உலகத்தில் ரொம்ப விசித்திரமானது மனிதனோட மூளை. விஞ்ஞானம், மருத்துவம் அதற்கெல்லாம் அப்பாற்பட்டது தான் அது. கோடிக்கணக்கான மர்மங்கள் அதில் இருக்கிறது’ என்ற வசனத்துடன் இந்த ட்ரெய்லர் ஆரம்பிக்கின்றது.

adbanner