‘தி லெஜண்ட்’ இயக்குனர்கள் பகிர்ந்த வீடியோ – பாடகர் கேகே பாடிய வசீகரமான கடைசி தமிழ் பாடல்!

பாடகர் கேகே கடேசியாக தமிழில் பாடிய பாடல் வீடியோ!

பிரபல பாடகர் கேகே திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகிற்கும் இசையுலகிற்கும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அவரின் மரணத்திற்கு பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர். தமிழ் உள்பட 11 இந்திய மொழிகளில் அவர் பாடியுள்ளார் என்பதும் குறிப்பாக தமிழில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பல திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

KK, The Legend, Tamil Cinema 02-June-2022

இந்நிலையில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த ‘தி லெஜன்ட்’ என்ற திரைப்படத்தில் பாடகர் கேகே ஒரு பாடலை பாடியுள்ளார் எனும் தகவலை அந்த படத்தின் இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி தங்களது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். இந்த பாடல் தான் அவர் பாடிய கடைசி தமிழ்ப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாடகர் கேகே இந்த பாடலை பாடும் போது எடுத்த வீடியோவையும் ஜேடி – ஜெர்ரி பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்தது குறித்து இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி தெரிவிப்பது, ‘கேகே எனும் மாயக்குரலோனின் மறைவு இசை உலகத்தில் ஒரு பேரிழப்பு. அவரோடு எங்கள் தி லெஜண்ட் படத்திற்கு சமீபத்தில்தான் கொஞ்சி கொஞ்சி பாடலை மும்பாயில் ஒலிப்பதிவு செய்தோம்.’ என குறிப்பிட்டுள்ளார்கள்.