பரத் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

வெளிவந்த பரத்தின் அடுத்தப்பட மோஷன் போஸ்டர்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பரத், தற்போது அவரின் 50வது படத்தில் நடித்து வருகிறார். ‘லவ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bharath, Vani Bhojan, Miral, Tamil Cinema 02-June-2022 001

இந்நிலையில் தற்போது மீண்டும் பரத் மற்றும் நடிகை வாணிபோஜன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு டைட்டில் ‘மிரள்’ என்று வைக்கப்பட்டுள்ளதோடு, மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Bharath, Vani Bhojan, Miral, Tamil Cinema 02-June-2022

மேலும் பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.