‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் அன்று கமல் எடுத்துள்ள முடிவு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

விக்ரம் படத்திற்காக கமலின் வியக்கும் செயல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகை உள்பட படக்குழுவினர் முதல் நாள் முதல் காட்சி அன்று திரையரங்குக்கு வந்து ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal, Vikram, Tamil Cinema 02-June-2022

அந்தவகையில் ரஜினி, அஜித்,விஜய் போன்ற நடிகர்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் மட்டும் மாறுவேடத்தில் வந்து படம் பார்த்துவிட்டு போவதாக சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில், சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க வருகை தர இருப்பதாக தகவல்கள் தெருவிக்கின்றன.

ஆகையால் அன்றைய தினம் 4 மணிக்கு காட்சியை ரோகிணி திரையரங்கிற்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் கமல்ஹாசனை நேரில் காண்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.