அரவிந்த் சாமி நடிக்கும் ‘கள்ளபார்ட்’ படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

அரவிந்த் சாமி படத்தின் வெளியான மாஸ் தகவல்!

அரவிந்த் சாமி நடிப்பில் நீண்ட காலமாக உருவாக்கத்தில் இருக்கும் ‘கள்ளபார்ட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சென்சார் தகவலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kallapart, Arvind Swamy, Regina Cassandra, Tamil Cinema 01-June-2022 002

கடல், தனி ஒருவன் மற்றும் போகன் ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் அரவிந்த் சாமி மீண்டும் மிரட்ட வந்துள்ளார்.

இந்நிலையில் என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் ‘கள்ளபார்ட்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கிக்கொண்டிருந்த இந்த திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. வரும் 24ஆம் தேதி கள்ளபார்ட் திரைப்படம் ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு சென்சாரில் UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kallapart, Arvind Swamy, Regina Cassandra, Tamil Cinema 01-June-2022