லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் வரும் 3மஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் முன்பதிவு தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் முன்பதிவில் ரசிகர்கள் காட்டிவரும் ஆர்வத்தை பார்க்கையில் முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தைக்கு சென்றதாக கோடம்பாக்கத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்போது லோகேஷிடம் முழு கதையையும் கேட்ட பிரபாஸ், இது வழக்கமான கதை தானே, வேறு ஏதாவது பிரமாண்டமான கதை இருந்தால் கொண்டு வாருங்கள், பார்க்கலாம் என கூறி திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
