கடின உழைப்பாளி நம்ம கமல் – வேற லெவல் ப்ரோமோஷன்

அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு = கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் வரும் 3மஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் முன்பதிவு தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் முன்பதிவில் ரசிகர்கள் காட்டிவரும் ஆர்வத்தை பார்க்கையில் முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இதட்கிடையில் கமல் தொடர்ந்தும் படத்தின் ப்ரோமோஷன்களை வேற லெவல் லெவலில் செய்து வருகிறார், அதன்படி நேற்று ஹைதெராபாத் சென்றிருந்த கமல் இன்று துபாய்யில் படத்தின் ப்ரோமோஷன் செய்ய உள்ளார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கமல் தொடர்ந்து பங்கு கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தமாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பும் தான் கமலின் விஸ்வரூப வெற்றிக்கு காரணம் என விமர்சர்கள் குறிப்பிடுகின்றனர்.