செய்தியாளர் சந்திப்பில் கெட்ட வார்த்தை பேசிய இயக்குனர் ஹரி குறித்து ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்த பதிவு – குவியும் நெட்டிசன்கள்!

இயக்குனர் ஹரி பிரஸ் மீட்டில் கெட்டவார்த்தை பேசியது குறித்து விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

Hari, Blue Sattai Maran, Tamil Cinema 01-June-2022 – தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஹரி என்பது தெரிந்தே. விறுவிறுப்பான ஆக்ஷன் படங்களை கொடுப்பதில் அவர் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஆறு, வேல், சாமி, பூஜை மற்றும் சிங்கம் போன்ற படங்களை கொடுத்துள்ளார். தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து யானை படத்தை இயக்கியுள்ளார்.

Hari, Blue Sattai Maran, Tamil Cinema 01-June-2022

இந்தப் படத்தில் பிரியா பவாணி ஷங்கர், அபிராமி, சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் ஜூன் 17ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில், யானை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றிருந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் ஹரி படம் குறித்த ஆக்ஷன் காட்சிகள் பற்றி பேசும்போது, பேச்சுவழக்கில் கெட்ட வார்த்தை ஒன்றை பிரயோகித்துள்ளார்.

பின்னர் அதை சுதாரித்துக் கொண்ட ஹரி சிரித்துக்கொண்டே நான் இப்போ என்ன பேசினேன் என வார்த்தையை விட்டுவிட்டேனா என்று கேட்டு சமாளித்துள்ளார். ஆனால் இயக்குனர் ஹரி வேண்டுமென்றே கெட்ட வார்த்தை பேசவில்லை என்பதும் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் இது குறித்து ப்ளுசட்டை மாறன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “1,000 கோடி வசூல் தரும் பான் இந்தியா படங்களை எடுத்திருந்தாலும் பிரெஸ் மீட்டில் தலைக்கனம் இன்றி நாகரீகமாக பேசுகிறார்கள் ராஜமௌலி, பிரசாந்த் நீல், நடிகர் யஷ் போன்றவர்கள். ஆனால் மிஷ்கின், ஹரி போன்றோர் மீடியா முன்பு அருவருப்பாக பேசுவது கண்டனத்திற்கு உரியது என ஊடகத்துறையினர் கருத்து.” என தெரிவித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் நீங்கள் முதலில் சரியாக பேசுங்கள் பின்னர் மற்றவர்களை குறை சொல்லலாம் என விளாசி வருகின்றனர். அதிகமாக ப்ளூ சட்டை மாறனுக்கு எதிரான பதிவுகளையே போட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Exit mobile version