பீஸ்ட் முதல் நாள் வசூலை முந்தும் நிலையில் விக்ரம்! முன்பதிவில் ரசிகர்கள் பெரும் ஆர்வம்

களைகட்டும் விக்ரம் கொண்டாட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் வரும் 3மஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் முன்பதிவு தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் முன்பதிவில் ரசிகர்கள் காட்டிவரும் ஆர்வத்தை பார்க்கையில் முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தற்போதைய நிலவர படி விக்ரம் படத்தின் முதல் காலெக்ஷன் 15 – 20 கோடி வரை இருக்கும் என தெரிவிக்கப்படும் நிலையில், பீஸ்ட் முதல் நாள் வசூலை முந்தும் நிலையில் நிலவரம் சென்றுகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பீஸ்ட் முதல் நாள் வசூல் 32 கோடியே 80 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram, Kamal, Beast, Box Office, Tamil Cinema 01-June-2022
adbanner