அஜித்-விஜய் குறித்து வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்!
Ajith, Vijay, Vignesh shivan, Nayanthara, Tamil Cinema 01-June-2022 – நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வரும் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்னதாக ஜூன் 8ஆம் தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

திருமணத்திற்கு திரையுலகில் இருந்து விஜய் சேதுபதி, நெல்சன் திலீப்குமார், சமந்தா ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே தற்போது அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறதாக தாவல் வந்துள்ளது. இதை தொடர்ந்து நடக்க இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட 30 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் மற்றும் விஜய்யை ஒன்றாக பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். அஜித்-விஜய்யை ஒன்றாக சேர்த்து பார்த்து பல காலமாகி விட்ட நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் இருவரையும் சேர்த்து பார்ப்பதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருமணத்தை முடித்த கையோடு நயன்தாரா ஆயுர்வதே சிகிச்சை பெற கேரளாவுக்கு செல்வதாக கூறப்படுகிறது. திருமணம் ஜூன் 9ஆம் தேதி என்னும் நிலையில், அதை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அது பற்றி இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.