‘விக்ரம்’ படத்துக்கு 60 டிக்கெட்டுகளை வாங்கி குவித்த கமல் ரசிகர் ஒருவரின் புகைப்படம் வைரல்!

கமலின் வெறித்தனமான ரசிகரின் செயல் இணையத்தில் வைரல்!

Vikram, Kamal, Tamil Cinema 01-June-2022 – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் வரும் 3மஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram, Kamal, Tamil Cinema 01-June-2022 001

இந்நிலையில் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த காரியம் பலரின் கவனத்திற்கு திரும்பியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரா எனும் அந்த ரசிகர் ‘விக்ரம்’ படத்திற்கான 60 டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். அதை இதய வடிவில் அலங்கரித்து மெத்தை மேல் படுத்தவாறு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவை கமல் ரசிகர்கள் பலர் லைக் செய்வதுடன், அந்த நபரின் பதிவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் ‘விக்ரம்’ படம் ரிலீஸுக்கு முன்பே 200 கோடி ரூபா வசூல் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram, Kamal, Tamil Cinema 01-June-2022