விஜய், அஜித், சூர்யா படங்களுக்கு பாடல்கள் பாடிய பிரபல பாடகர் மரணம் – அதிர்ச்சியில் திரைத்துறையினர் !

பிரபல பாடகரின் மரணத்தால் அதிர்ச்சியில் இசை ரசிகர்கள்!

KK, Krishnakumar, Tamil Cinema 01-June-2022 – விஜய், அஜித், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடிய பாடகர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த செய்தி இசை ரசிகர்கள் மற்றும் இசை சக்கரவர்த்திகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KK, Krishnakumar, Tamil Cinema 01-June-2022 002

தமிழ் உட்பட 11 இந்திய மொழிகளில் சுமார் ஆறாயிரம் பாடல்களை பாடியவர் பிரபல பாடகர் கேகே எனும் கிருஷ்ணகுமார். இவர் கடந்த 1968ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த பிறந்தார்.

‘காதல் தேசம்’ திரைப்படத்தில் ‘கல்லூரி சாலை’ என்ற பாடலின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின் ‘மின்சார கண்ணா’, ‘விஐபி’, ‘தூள்’, ‘கில்லி’ உள்பட பல திரைப்படங்களில் கேகே பாடியுள்ளார். மற்றும் ‘கில்லி’ படத்தில் இவர் பாடிய ‘அப்படி போடு’ என்ற பாடல் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தமிழில் அறிமுகம் செய்த பெருமை ஏ.ஆர். ரஹ்மான் அவர்களையே சேரும்.

KK, Krishnakumar, Tamil Cinema 01-June-2022

இந்நிலையில் கொல்கத்தாவில் கல்லூரி கலாச்சார விழாவில் பங்கேற்க சென்ற பாடகர் கேகே, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமுற்றார். இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் பாடகர் கேகே மறைவிற்கு பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஒரே வாரத்தில் பாடகர் சித்துமூஸ் வாலா மற்றும் கேகே ஆகியோர்களின் மறைவு இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு’ என குறிப்பிட்டுள்ளார்.