விஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் வெளிவந்த வேற லெவல் புதிய அப்டேட்!

தளபதி 66 படத்தின் புதிய தகவல்

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Tamil Cinema 01-June-2022 – வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், தில்ராஜூ தயாரிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Tamil Cinema 01-June-2022 002

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் வரும் ஜூன் இரண்டாம் தேதிமுதல் சென்னையில் ‘தளபதி 66’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மற்றும் ஏற்கனவே இந்த படத்தின் ஒரு பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்னையில் இன்னொரு பாடலின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல்கள் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் தளபதி விஜய், குடும்பப்பாங்கான சென்டிமென்ட் கதையில் நடித்து வருவதால் இந்த படத்திற்கு அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.