இயக்குனர் ஹரியின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நடிகர் – வேற லெவல் அப்டேட்!

இயக்குநர் ஹரியுடன் கைகோர்க்கும் பிரபல நடிகர்!

Hari, Jayam Ravi, Tamil Cinema 01-June-2022 – இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், உருவான ‘யானை’ திரைப்படம் வரும் ஜூன் 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Hari, Jayam Ravi, Tamil Cinema 01-June-2022

இந்நிலையில் இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடிந்த நிலையில் தற்போது ‘அகிலன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு அவர் ஹரியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அகமது இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் நயன்தாரா என்றும் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.