கமலின் ‘விக்ரம்’ படத்தின் ப்ரோமோ வீடியோ!
Kamal, Vijay Sethupathi, Vikram, Tamil Cinema 31-May-2022 – கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், ஒவ்வொரு வீடியோவும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ‘இயக்குனரின் கதை’ என்ற டைட்டிலில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்த காட்சிகளை வெறும் 45 விநாடிகள் மட்டுமே லோகேஷ் கனகராஜ் படமாக்கிய விதம் குறித்த காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இந்தப் படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் என்பது அவர்களின் கமெண்டில் இருந்தே தெரியவருகிறது.
The story of our Director @Dir_Lokesh ! #onlyontwitter #KamalHaasan #Vikram #VikramHitlist #VikramInAction#VikramFromJune3@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @turmericmediaTM pic.twitter.com/FNkg5IzAlr
— Raaj Kamal Films International (@RKFI) May 31, 2022