‘சந்தானம்’ கேரக்டரில் தீயாய் இறங்கும் விஜய்சேதுபதி மாஸ் போஸ்டர் வெளியாகியுள்ளது!

விஜய் சேதுபதியின் மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

Kamal, Vikram, Vijay Sethupathi, Santhanam Tamil Cinema 31-May-2022 – சந்தானம் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருப்பதாக வெளியாகி இருக்கும் மாஸ் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kamal, Vikram, Vijay Sethupathi, Santhanam Tamil Cinema 31-May-2022

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’ படத்தில் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதியும், மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பகத்பாசிலும் நடித்துள்ளனர். மேலும் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உட்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்திற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக் குழுவினர் மும்மரமாக செய்து வருகின்றனர்.

Kamal, Vikram, Vijay Sethupathi, Santhanam Tamil Cinema 31-May-2022 001

இந்நிலையில் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் குறித்த மாஸ் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இந்த போஸ்டரில் ‘சந்தானம்’ என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து உள்ளதாகவும் ‘தீயவன் வருகிறான்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாஸ் போஸ்டர் தற்போது இணையதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.