சார்பட்டா நடிகையின் சாகச வீடியோ இணையத்தில் வைரல்!

பிரபல நடிகையின் சாகச வீடியோ வைரல்!

Dushara Vijayan, Sarpatta Parambarai, Tamil Cinema 31-May-2022 – ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை துஷாரா விஜயனின் சாகச வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Dushara Vijayan, Sarpatta Parambarai, Tamil Cinema 31-May-2022

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா கதாநாயகனாக நடித்த ‘சார்ப்பட்டா பரம்பரை’ படத்தில் ஷபீர், துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் என பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் துஷாரா விஜயனின் மாரியம்மாள் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துஷாரா விஜயன், அநீதி, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள துஷாரா. ஸ்கை டைவிங் செய்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.