கமல் படத்தின் முதல் காட்சியை பார்க்க விருப்பம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!
Kamal, Vikram, Anwar Ibrahim, Tamil Cinema 31-May-2022 – உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், மலேசியா எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்மை, கமல்ஹாசன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘விக்ரம்’ வரும் ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் போன்றோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ‘விக்ரம்’ படத்திற்கான புரமோஷனுக்காக கமல்ஹாசன் பல நாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதேவேளை மலேசியாவிற்கும் புரமோஷனுக்காக சென்ற கமல், மலேசியா எதிர்க்கட்சி தலைவடான அன்வர் இப்ராஹிமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் கமலுடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்து மலேசியா எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், “இன்று பிரமுகரும் சூப்பர் ஸ்டாருமான கமல்ஹாசனை சந்தித்திருக்கிறேன். குறிப்பாக இந்திய வரலாறு மற்றும் நல்லாட்சி பற்றிய கேள்வி, ஊழலுக்கு எதிரான உறுதிப்பாடு குறித்து அவருடன் நீண்ட நேர விவாதம் நடைபெற்றது” என தெருவித்ததோடு மலேசியா தலைநகரில் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சியில் நான் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.