காதலை உறுதி செய்த பிக் பாஸ் பவானி ரெட்டி

பாவனி ரெட்டி – டான்ஸ் மாஸ்டர்

Pavani Reddy, Bigg Boss Tamil, Tamil Cinema 31st May 2022 – கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி மற்றும் டான்ஸ் மாஸ்டர் அமீர். மேலும் பாவனி ரெட்டி விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர், பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடி வருகின்றனர். அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பாவனி ரெட்டி ரொமான்டிக் ஆன கேண்டில் லைட் டின்னர் சாப்பிடும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ‘காதலை உணர்கிறேன்’ என அவர் குறிப்பிட்டு இருப்பதால் அவர் மறைமுகமாக காதலை உறுதி செய்து இருக்கிறார் என தெரிவிக்கப்டுகிறது.

மேலும் மற்றொரு புகைப்படத்தில் mine என குறிப்பிட்டு அமீர் அருகில் இருக்கும் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார் பாவனி.

Exit mobile version