‘விக்ரம்’ ரிலீஸுக்கு முன்பே தெறிக்கவிடும் வசூல் – சும்மா அதிரவைக்கும் கலெக்ஷன்!

‘விக்ரம்’ படம் ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளது!

Kamal, Vikram, Tamil Cinema 31-May-2022 – கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார் .

Kamal, Vikram, Tamil Cinema 31-May-2022

இந்நிலையில் விக்ரம் படம் ரிலீஸாவதற்கு முன்பே 200 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமம் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவை பெரிய தொகைக்கு சென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகநாயகன் கமலின் படம் ரிலீஸுக்கு முன்பே 200 கோடி ரூபா வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் விக்ரம் படத்தின் ஒன்லைனர் இது தான் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருப்பதை காணக்கூடியவாறு உள்ளது.

மற்றும் ஐஎம்டிபி இணையதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் ‘விக்ரம்’ படம் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு ஆண்டுகள் கழித்து கமல் நடிப்பில் ஒரு படம் ரிலீஸாவதால் விக்ரம் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.