‘விக்ரம்’ படத்துடன் வெளியாகயிருந்த பிரபல நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

கமல் படத்துடன் ரிலீஸாக இருந்த பிரபல நடிகரின் பட ரிலீஸ் தேதி பிற்போடப்பட்டுள்ளது!

Kamal, Nivin Pauly, Vikram, Tamil Cinema 31-May-2022 – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamal, Nivin Pauly, Vikram, Tamil Cinema 31-May-2022

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதியான ஜூன் 3 ஆம் தேதி அன்று ரிலீசாக இருந்த பிரபல நடிகரின் படம் ஒன்றின் ரிலீஸ் தேதி ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் ரவி இயக்கத்தில், பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான திரைப்படம் ‘துரமுகம்’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 3 என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 10 ஆம் தேதி என படக்குழுவாள் மாற்றப்பட்டுள்ளது.

Kamal, Nivin Pauly, Vikram, Tamil Cinema 31-May-2022 001

இதையடுத்து கேரளாவில் ’’விக்ரம்’ திரைப்படத்திற்கு கூடுதலான திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெருவிக்கின்றன. ஏற்கனவே கேரளாவில் ‘விக்ரம்’ திரைப்படத்தை 370 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது அனேகமாக 100 இல் இருந்து 200 திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெருவிக்கின்றன.