இளையராஜாவிற்கு ஆயுள் விருத்தி ஹோமபூஜை செய்யப்பட்டது – இந்த கோவிலில் தான்!

இளையராஜாவிற்கு ஆயுள் விருத்தி ஹோமபூஜை!

Ilayaraja, Tamil Cinema 31-May-2022 – இசைஞானி இளையராஜாவுக்கு கோவில் ஒன்றில் ஆயுள் விருத்தி ஹோம பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் இணையதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Ilayaraja, Tamil Cinema 31-May-2022 002

தமிழ் சினிமாவில் இசையில் பெரும் சாதனை செய்த இசைஞானி இளையராஜாவுக்கு திருக்கடையூர் கோவிலில் ஆயுள் விருத்தி ஹோமம் பூஜை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் என்ற பகுதியில் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தர்மபுரி ஆதினத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் தான் மார்க்கண்டேயனுக்காக எமனை காலசம்ஹார மூர்த்தி வதம் செய்த வரலாறு உண்டு. இதனை அடுத்து இந்த கோவிலில் பல பிரபலங்கள் ஆயுள் விருத்தி பூஜை செய்வது காலந்தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது.

Ilayaraja, Tamil Cinema 31-May-2022

இந்நிலையில் 80 வயதையடைந்த இசைஞானி இளையராஜாவுக்கு, திருக்கடையூர் கோவிலில் ஆயுள் ஹோம விருத்தி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்காக கோவிலுக்கு வந்த இளையராஜாவை கோவில் நிர்வாகிகள் வரவேற்றதையடுத்து மங்கள வாத்தியம் இசைக்க இளையராஜாவுக்கான ஆயுள் விருத்தி ஹோம பூஜை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பூஜையில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளையராஜாவை நேரில்கண்ட அந்த பகுதி ரசிகர்கள் அவரிடம் ஆசி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ilayaraja, Tamil Cinema 31-May-2022 001