‘மாநாடு’ படத்தின் மொத்த வசூல் நிலவரத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

சிம்புவின் மாநாடு படத்தின் பிரமிக்க வைக்கும் மொத்த வசூல் நிலவரம்!

Simbu, Maanadu, Suresh Kamatchi, Tamil Cinema 31-May-2022 – சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதன் பின் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Simbu, Maanadu, Suresh Kamatchi, Tamil Cinema 31-May-2022

‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் மற்றும் ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்தது.

சிம்புவிற்கு நீண்ட இடைவெளியின் பின் இந்த படம் அவருடைய திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘மாநாடு’ திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இத் திரைப்படத்தின் மொத்த வசூல் 117 கோடி ரூபா என்றும் கடந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படம் என்றும், இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் தனது நன்றி என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.