‘எஸ்.கே 20’ அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

SK 20, Sivakarthikeyan, Maria Ryaboshapka, Tamil Cinema 31-May-2022 – நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்.கே 20’ திரைப்படத்தை விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

SK 20, Sivakarthikeyan, Maria Ryaboshapka, Tamil Cinema 31-May-2022

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தொடர்ந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் சாதனை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த திரைப்படமான ‘எஸ்.கே 20’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ‘எஸ்.கே 20’ படம் ரிலீஸ் ஆகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

SK 20, Sivakarthikeyan, Maria Ryaboshapka, Tamil Cinema 31-May-2022 001

மற்றும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் ‘எஸ்.கே 20’ படத்தை அனுதீப் இயக்க, தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர், டிரைலர் ரிலீஸ் விவரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஷிகண்னா நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார் என்பதும் இவர்களுடன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.