அந்த மாதிரி கேரக்ட்டரில் நடிக்க யோசித்த அஜித் – ரகசியத்தை உடைத்த பிரபல இயக்குனர்!

அஜித் நடிக்க தயக்கம் காட்டிய கதாபாத்திரம் குறித்து உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்!

Ajith Kumar. K.S. Ravikumar, Tamil Cinema 31-May-2022 – தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான தல அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Ajith Kumar. K.S. Ravikumar, Tamil Cinema 31-May-2022

வலிமையை தொடர்ந்து ‘ஏகே 61’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஹைத்ராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்றும் இந்த வருட இறுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் குறித்து தனியார் யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும் போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ‘வரலாறு’ படத்தில் அஜித் நடிக்க தயங்கியதாக தெரிவித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்பாதர் என தலைப்பிடப்பட்டு அதன்பிறகு ‘வரலாறு’ என பெயர் மாற்றப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூலை குவித்தது. இது குறித்து கே.ஸ். ரவிக்குமார் கூறுகையில், ‘வரலாறு படத்தில் பெண்களின் நளினம் கொண்ட பரதநாட்டிய கலைஞராக நடிப்பதால் தன்னை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களா என ரொம்ப ஃபீல் பண்ணி தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. இந்த ரோல் உங்க ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என கூறியதாகவும், அதேபோல இந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடியதாகவும்’ கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.