சூர்யாவின் ‘அருவா’ படம் குறித்து உண்மையை போட்டுடைத்த இயக்குனர் ஹரி!

சூர்யா படம் குறித்து தகவல் தெரிவித்த இயக்குனர் ஹரி!

Yaanai, Arun Vijay, Suriya, Hari, Tamil Cinema 31-May-2022 – இயக்குநர் ஹரி இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் ‘யானை’. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகிஅனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

Yaanai, Arun Vijay, Suriya, Hari, Tamil Cinema 31-May-2022

இந்நிலையில் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்தப்படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியான நிலையில், இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ‘யானை’ படத்தின் கதை சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையா என கேட்கப்பட்டது. அதற்கு ஹரி ‘அருவா’ அங்கயே தான் இருக்கு. எப்ப வேணுனாலும் கைல எடுத்துக்கலாம். சில காரணங்களுக்காக படம் தள்ளி போயிருக்கு என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘யானை’ படம் வேறு விதமான கதைக்களத்துடன் அமைந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். அதே போல் படத்தின் ட்ரைலர் ஹரி படம் போன்றே இல்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றனர். வசனம் எதுவும் இல்லாமல் சென்டிமென்ட் காட்சிகளுடன் வெளியாகியுள்ள ‘யானை’ பட டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.