மீண்டும் உருவான டைட்டானிக் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kalaiyarasan – Titanic 31-May-2022

Kalaiyarasan, Anandhi, Titanic, Tamil Cinema 31-May-2022 – ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ‘கலையரசன்’ தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் மற்றும் ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘குதிரைவால்’. இந்த படத்தில் இவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பாக சி.வி. குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்’ படத்தில் நடித்துள்ளார்.

Kalaiyarasan, Anandhi, Titanic, Tamil Cinema 31-May-2022

இந்த படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்க காளி வெங்கட், ஆஷ்னா சவேரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜானகிராமன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் 6 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘டைட்டானிக்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு வேளியிட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 24 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படம் ரொமான்ஸ்ஷுடன் கூடிய காமெடி திரைப்படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.