கமல் – விஜய் கூட்டணி பற்றிய மாஸ் தகவல்!
Kamal, Vijay, Vikram, Tamil Cinema 30-May-2022 – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் ‘விக்ரம் 3’ படத்தில் நடிகர் விஜய்யை எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி எழும்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசன் கூறியது, “விக்ரம் 3 படத்திற்காக ஒரு ஹீரோவை ஏற்கனவே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என நடிகர் சூர்யா குறித்து ஒளிவுமறைவாக தெரிவித்துள்ளார். அத்துடன் விஜய் ஒப்புக்கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.