தனுஷ் செய்த அயோக்கியத்தனம் – பிரபல தயாரிப்பாளர் உருக்கப்பேச்சு!

தனுஷின் செயலால் மனமுடைந்து பேசிய பிரபல தயாரிப்பாளர்!

Dhanush, K. Rajan, Naane Varuven, Tamil Cineam 30-May-2022 – நடிகர் தனுஷ் கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்த நிலையில், இப்படம் நிறைவடைத்துவிட்ட நிலையில் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

Dhanush, K. Rajan, Naane Varuven, Tamil Cineam 30-May-2022

நடிகர் தனுஷ் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி அதில் அவரே ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். மேலும், தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேனும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனியார் யூடிப் சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்த தயாரிப்பாளர் கே. ராஜன், தனுஷ் குறித்து பேசியிருந்தார். அதில், ‘கர்ணன், அசுரன் படத்தின் மூலம் தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்துக் காட்டினார். ஆனால் அவர் மேல் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் தமிழில் ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிய 20 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்தவுடன் தமிழில் நடித்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ஹிந்திக்கு ஓடி விட்டார்.

ஆகவே இவரை நம்பி இந்த தமிழ் படத்தை தயாரிக்க பணம் போட்டவர் கதி? இதெல்லாம் எவ்ளோ அயோக்கியத்தனம்? இது தயாரிப்பாளருக்கு செய்யும் துரோகம் இல்லையா? இவர் செய்கிற அக்கிரமத்திற்கு அளவு இல்லையா? இந்த மாதிரி செயல்களை எல்லாம் விட்டு விட்டு எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வழிவகுக்க வேண்டும். மேலும் தமிழில் இன்னும் பல படங்கள் நல்ல படியாக பண்ணினால் எங்கேயோ போய்விடுவார்’ என தனுஷ் குறித்து உருக்கமாக பேசியுள்ளார் கே.ராஜன்.