மதம் கொண்ட அருண்விஜய்யின் ‘யானை’ ட்ரைலர் வெளியீடு

Yaanai – Official Trailer – Hari – Arun Vijay – Priya Bhavani Shankar – GV Prakash

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘யானை’ திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அருண்விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, அம்மு அபிராமி, யோகிபாபு, ராதிகா, சமுத்திரக்கனி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் கோபிநாத் படத்தொகுப்பில் படம் உருவாகியுள்ளது.

இரண்டு நிமிடத்திற்கும் அதிகமாக உள்ள இந்த ட்ரெய்லரில் சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் என மிரட்டுகிறது படக்குழு. குறிப்பதாக ஒதுங்கி போன உரசுவிக, பதுங்கி போன பாய்வீக, சமாதானம் பேச வந்தாலும் அரிவாளில் தானடா வெள்ளக்கொடியை எடுத்துட்டு வார்றீங்க’ என்ற ஆவேசமான அருண்விஜய் வசனத்துடன் மதம் கொண்டு முடிவு பெறுகிறது டிரைலர்.

Yaanai - Official Trailer - Hari - Arun Vijay - Priya Bhavani Shankar - GV Prakash