‘விக்ரம்’ படத்தின் கதை – வெளியான தகவல்

Vikram Ready Release

Vikram, Kamal Haasan, Tamil Cinema 30th May 2022 – நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மேலும் படத்தின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை திரையிடும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு நிறுவனம் இந்த படத்தின் ஒன்லைன் கதையை தனது சமூக வலைத்தளத்தில் இன்று மாலை அறிவித்துள்ளது .

அதில் ’விக்ரம்’ படத்தின் ஒன்லைன் கதை என்பது ’கடத்தப்பட்ட அரசு அதிகாரி ஒருவரை மீட்க, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எடுக்கும் நடவடிக்கை தான்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து உள்ளார், மேலும் கடத்தப்பட்ட அரசு அதிகாரியாக பகத் பாசில், மற்றும் அரசு அதிகாரியை கடத்திய வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.