திடீரென ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன் – புகைப்படத்துடன் கூடிய தகவல்!

சிவகார்த்திகேயன் ரஜினியை சந்தித்தது குறித்து தகவல்!

Sivakarthikeyan, Rajinikanth, Tamil Cinema 30-May-2022 – தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால் இன்று முன்னணி நடிகராக வளர்ந்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை தனக்கென ஒதுக்கியவர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan, Rajinikanth, Tamil Cinema 30-May-2022

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வெளியான நிலையில், படத்தை பார்த்த ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு சிவகார்த்திகேயனை மற்றும் படக்குழுவை பாராட்டியுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நன்றி கூறியதோடு அவருடன் புகைப்படங்களை எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் ரஜினிகாந்தை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் இந்த பதிவில், ‘இந்திய சினிமாவின் டான் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை சந்தித்தேன் மற்றும் அவரது ஆசிகளைப் பெற்றேன்’ என தெரிவித்துள்ளார்.