இந்தியா கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் உள்ளாடை விளம்பரத்தில்நடித்தது குறித்து நடிகை கஸ்தூரியின் பதிவு!

கே.எல்.ராகுல் நடித்த உள்ளாடை விளம்பரம் பற்றி நடிகை கஸ்தூரி கருத்து!

Kasthuri, KL Rahul, Tamil Cinema 30-May-2022 – இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு பட்ட விளம்பரங்களில் நடித்து வரும் நிலையில் அந்த விளம்பரங்கள் மிகப் பெரிய அளவில் ரசிகர்களையும் பொது மக்களையும் கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான கே.எல் ராகுல் தற்போது உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள நிலையில், இந்த விளம்பர புகைப்படங்களை தனது டுவிட்டரில் பகிர்ந்த நடிகை கஸ்தூரி, ‘இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்றாலே அவர்களை கோலா, சிப்ஸ், ஆன்லைன் கேம் போன்ற விளம்பரத்தில் தான் பார்க்கிறோம். பல இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடை விளம்பரமும் செய்து வருகின்றனர்.

ஆனால் உள்ளாடை விளம்பரத்தில் கே.எல்.ராகுலை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஒரு குத்து சண்டை வீரர் போல் அவர் காட்சியளிக்கிறார். இந்த விளம்பரம் பல ஆண்களை கவரும் என நம்புகிறேன்’ என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version