’தாக்கட்’ பட நஷ்டத்திற்கு பின் கங்கனா ரனாவத் எடுத்த முடிவு!

கங்கனா ரனாவத் 30-05-2022

Kangana Ranaut, Tamil Cinema 22-05-2022 : நடிகை கங்கனா ரனாவத் நடித்த ’தாக்கட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை 3 கோடி மட்டுமே வசூல் ஆனது என்றும் அதனால் தயாரிப்பாளருக்கு 97 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ’தாக்கட்’ படத்தின் நஷ்டத்தை அடுத்து கங்கனா ரனாவத் முன்னைதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நிலையில், அடுத்ததாக முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்திரைப்படத்தை அவரே இயக்கப் போவதாகவும் இந்த படத்திற்கு ’எமர்ஜென்சி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Kangana Ranaut, Tamil Cinema 22-05-2022

கடந்த சில ஆண்டுகளாக கங்கனா ரனாவத் படங்கள் படுமோசமாக தோல்வியடைந்திருந்தாலும் அவர் இயக்கிய ’மணிகர்ணிகா’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.