நான் அடிக்கிற அடி மரண அடியா இருக்கும் – ‘தி லெஜண்ட்’

டிரைலர் ஒரு பார்வை

The Legend, Official Movie Trailer, Legend Saravanan 30th May 2022 : பிரபல சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் விஞ்ஞானியாக நடிக்கும் சரவணன், தான் படித்த படிப்பும் கண்டுபிடிப்புகளும் ஏழை எளிய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இருக்கிறார். ஆனால் அவருடைய எண்ணத்திற்கும் வில்லன் கூட்டம் தடை போடுகிறது, பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கின்றது. இதனை அவர் எப்படி சமாளித்தார்? என்பதே இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிகிறது .

மேலும் இந்த டமூன்று நிமிட டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமைந்து இருப்பதால் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை மேட்க்காட்டுகிறது.

இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு உள்பட பலர் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.