‘விக்ரம்’ படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரமோஷன் செய்த கமல்ஹாசன்!

‘விக்ரம்’ படத்திற்காக கமல் எடுத்துள்ள புதுமையான முயற்சிகள்!

Kamal Haasan, Mohanlal, Bigg Boss Tamil, Bigg Boss Malayalam, Vikram, TAmil Cinema 30-May-2022 – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிக்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் கமல்ஹாசன், வெளிநாடுகளுக்கும் சென்று புரமோஷன் பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan, Mohanlal, Bigg Boss Tamil, Bigg Boss Malayalam, Vikram, TAmil Cinema 30-May-2022

இந்நிலையில் பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், ‘விக்ரம்’ படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது புரமோஷன் செய்துள்ளார். தற்போது பிக்பாஸ் மலையாளத்தில் 4 வது சீசன் நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நான்காவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan, Mohanlal, Bigg Boss Tamil, Bigg Boss Malayalam, Vikram, TAmil Cinema 30-May-2022 001

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டது போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் மோகன்லாலுடன் உரையாடிய கமல்ஹாசன் ‘விக்ரம்’ படம் குறித்தும் சில தகவல்களை பகிந்து கொண்டார். மற்றும் இந்த படத்தின் டிரைலரும் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.