விஷ்மயா வழக்கு குறித்து கருத்து தெரிவித்த பாலாஜி முருகதாஸ்!

உண்மையான ஆம்பளை அதை செய்ய மாட்டான்

Balaji Murugadoss, Bigg boss Tamil , Tamil Cinema 30th May 2022 : கேரளாவை சேர்ந்த விஷ்மயா என்ற பெண் வரதட்சணை கொடுமையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார் வழக்கில் விஷ்மயாவின் கணவர் கிரண்குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 12.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் ’உண்மையான ஆம்பளை அதை செய்ய மாட்டான்’ என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து மிரளும் கருத்து தெரிவித்த பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், ‘உண்மையான ஒரு ஆண் வரதட்சனை வாங்க மாட்டார் என்றும் அவன் சுயமரியாதை மற்றும் சுய வருமானத்தால் வாழ்வார் என்றும் கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு அவர் அறிவுரை கூறிய போது ’உங்களை ஒரு சொத்தாகவோ, பொருளாகவோ நினைப்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். பாலாஜி முருகதாஸின் இந்த கருத்துக்கு பரவலாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.