பிரபல இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் மீரா ஜாஸ்மின் புகைப்படம் இணையத்தில் வைரல்!

மீரா ஜாஸ்மின் பிரபல இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் பல சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது

Meera Jasmine, Arun Gopy, Tamil Cinema 30-May-2022 – நடிகை மீரா ஜாஸ்மின் பிரபல இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருவதுடன் இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

Meera Jasmine, Arun Gopy, Tamil Cinema 30-May-2022 001
Arun Gopy – Meera Jasmine

தளபதி விஜய் நடித்த ‘புதிய கீதை’, மாதவன் நடித்த ‘ரன்’, விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை மீராஜாஸ்மின், கடந்த 2014 ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Meera Jasmine, Arun Gopy, Tamil Cinema 30-May-2022
மீரா ஜாஸ்மின் – அனில் ஜான் டைட்டஸ்

திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது கணவரை பிரிய முடிவு எடுத்திருப்பதாக தகவல் தெருவிக்கின்றன. மேலும் அவர் சினிமாவில் மீண்டும் இணைய முயற்சி செய்து வருகிறார் என்றும், இதனால் அவர் தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மலையாள இயக்குனர் அருண் கோபியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் மீரா ஜாஸ்மின் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை மீராஜாஸ்மின் அருண்கோபியை காதலிக்கிறாரா? அல்லது அருண்கோபி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Meera Jasmine, Arun Gopy, Tamil Cinema 30-May-2022 002

இது குறித்து மீரா ஜாஸ்மின் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.