பிக்பாஸ் பிரபலத்துக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து குவியும் வாழ்த்துக்கள்!

பிக்பாஸ் பிரபலம் மதுமிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

Jangiri Madhumitha, Bigg Boss Tamil, Tamil Cinema 30-May-2022 – பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Jangiri Madhumitha, Bigg Boss Tamil, Tamil Cinema 30-May-2022

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. இப்படத்தில் அவர் ஜாங்கிரி என்ற கேரக்டரில் நடித்ததால் ஜாங்கிரி மதுமிதா என்று அழைக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் திடீரென அவர் கையை அறுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

மற்றும் நடிகை மதுமிதா கடந்த 2009 ஆம் ஆண்டு மோசஸ் என்பவவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் சமீபத்தில் மதுமிதா கர்ப்பம் ஆனார் என்பதும் அவருடைய வளைகாப்பு புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.