விஜய் டிவி பிரியங்காவின் அதிர்ச்சியான திடீர் முடிவு!
Priyanka Deshpande, Bigg Boss Tamil, Tamil Cinema 30-May-2022 – விஜய் டிவியில் இருந்து தொகுப்பாளினி பிரியங்கா வெளியேற இருப்பதாக வந்திருக்கும் தகவல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரியங்கா, ராஜூமுருகனை அடுத்து இரண்டாவது இடத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள், சூப்பர் சிங்கர் உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.

அந்த வேளை விஜய் டிவி பிரபலங்கள் உள்பட பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அந்தவகையில் பாலாவுடன் பிரியங்கா பேசி கொண்டிருக்கும் ஒரு வீடியோ மட்டும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் தனக்கு வயதாகி விட்டது என்றும் அதனால் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி ஒரு பிரேக் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்றும் கூறியிருக்கும் நிலையில், அதற்கு பாலா ‘நீங்களே நினைத்தாலும் ஆங்கர் பணியிலிருந்து உங்களால் வெளியே போக முடியாது என்றும், மைக்கை பிடித்தவரெல்லாம் ஆங்கராக முடியாது என்றும் மைக்கிற்கே பிடித்தவர் நீங்கள்தான் என்றும் கூறும் காட்சி உள்ளதாக வெளியாகியிருக்கிறது.
விஜய் டிவியில் இருந்து வெளியேற பிரியங்கா எடுத்த முடிவால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.