கமல் தனது படத்தில் நடிக்க வற்புறுத்தி கேட்டும் மறுத்த பிரபல நடிகர்!

கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்த பிரபலம்

Kamal Haasan, Dilip Kumar, Tamil Cinema 30-May-2022 – தனது படத்தில் நடிக்குமாறு உலக நாயகன் கமல்ஹாசன் கெஞ்சி கேட்டதாகவும், ஆனால் அந்த நடிகர் நடிக்க முடியாது என மறுத்து விட்டதாகவும் சமீபத்தில் ‘விக்ரம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Kamal Haasan, Dilip Kumar, Tamil Cinema 30-May-2022

கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி உட்பட பலரது நடிப்பில் உருவான ‘தேவர் மகன்’ என்ற திரைப்படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இந்தி ரீமேக் 1997 ஆம் ஆண்டு தயாரான வேளை அப்போது இந்த படத்தில் சிவாஜிகணேசன் கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரிடம் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Kamal Haasan, Dilip Kumar, Tamil Cinema 30-May-2022 001

கமல் எவ்வளவு கெஞ்சிக் கேட்ட போதிலும், தற்போது தான் நடிப்பதில்லை என்றும் தனது முடிவை மாற்ற முடியாது என்றும் திலீப்குமார் கூறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இதனை அடுத்து வேறு வழியின்றி அந்த கேரக்டரில் அம்ப்ரிஷ்புரியை நடிக்க வைத்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் படத்தில் நடிக்க முடியாது என பழம்பெரும் நடிகர் திலீப் குமார் கூறிய தகவல் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.