நீண்ட கால நண்பரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் கலந்துகொண்ட நிகழ்வு

Rajinikanth, Karuanidhi, Stalin. Udhayanidhi, Tanil Cinema 30-May-2022 – ரஜினிகாந்த் அவர்கள் தனது நீண்ட நாள் நண்பரான மறைந்த பிரபல இயக்குனரும், எழுத்தாளருமான கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

Rajinikanth, Karuanidhi, Stalin. Udhayanidhi, Tanil Cinema 30-May-2022

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி வெண்கல சிலை திறப்பு விழா நேற்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சில அமைச்சர்கள் பங்கேற்ற இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த சிலை திறப்பு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வருகை தந்திருந்தார். மேலும் கவிஞர் வைரமுத்து உள்பட ஒருசில திரை உலக பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திறந்து வைக்கப்பட்ட கருணாநிதியின் சிலையில் கீழ் குறிப்பிட்டுள்ள ஐந்து பொன்மொழிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.