‘ஏகே 61’ பட தயாரிப்பாளர் போனிகபூர் போலீசில் முறைப்பாடு!

அஜித் பட தயாரிப்பாளர் பொலிஸில் முறைப்பாடு!

Boney Kapoor, AK 61, Nenjuku Needhi, Tamil Cinema 30-May-2022 – பாலிவுட் திரையுலகின் முன்னணி வகிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவரான போனிகபூர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் குறிப்பாக அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர், தற்போது ‘அஜித் 61’ படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Boney Kapoor, AK 61, Nenjuku Needhi, Tamil Cinema 30-May-2022

மேலும் அவருடைய தயாரிப்பில் உருவான உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3.82 லட்சம் ரூபா பண மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து போனிகபூர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது போலீசாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என தகவல்கள் தெருவிக்கின்றன.