ஒல்லி நடிகரின் கேரியருக்கு அடுத்தடுத்து விழும் அடிகள் – காரணம் பெரிய இடமா?

ஒல்லி நடிகரின் கேரியருக்கு பெரிய இடத்தால் ஆப்பு?

Tamil Cinema Kisu Kisu, Kisu Kisu, Tamil Cinema 28-May-2022 – பெரிய இடத்து மாப்பிள்ளையான பிறகு தான் ஒல்லி நடிகரின் கேரியர் உச்சம் தொட்டது. இந்நிலையில் மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

Tamil Cinema Kisu Kisu, Kisu Kisu, Tamil Cinema 28-May-2022

‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததுபோல்’ நாங்கள் வளர்த்துவிட்ட பையன், எங்களுக்கே எதிராக திரும்புவதா என பெரிய இடத்தில் இருந்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

இனிமேல் ஒல்லி நடிகரை வைத்து படம் பண்ண வேண்டாம் என்பது தான் அந்த கோரிக்கையாம். அதிலும் அதிகாரம் படைத்த தயாரிப்பாளர் ஒருவரோ பெரிய இடத்து வாக்கை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு சக தயாரிப்பாளர்களை அணுகி ஒல்லி நடிகர் பக்கமே திரும்பக் கூடாது என்று கூறியிருக்கிறாராம்.

இதையடுத்து பெரிய இடத்து வம்பு எதற்கு என்று ஒல்லி நடிகரை முற்றாக ஒதுக்கி வருகிறார்களாம் தயாரிப்பாளர்கள். மேலும் சார், ஒல்லி நடிகர் தான் என் படத்துக்கு ஹீரோ என்று எந்த இயக்குநராவது கூறினால், அவர் வேண்டாம், வேறு ஆளை பாருங்க, இல்லை நான் படம் தயாரிக்க மாட்டேன் என்று கூறுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

தயாரிப்பாளர்களின் இந்த முடிவால் ஒல்லி நடிகரின் கேரியர் மிக மோசமாக அடிவாங்கிக் கொண்டிருக்கிறதாம்.