பிரபல இசையமைப்பாளர் தனது மகளுடன் நடிகை ரம்பா குடும்பத்தை சந்தித்துள்ளார் – வீடியோ வைரல்!

நடிகை ரம்பா குடும்பத்துடன் செம ஜொலி பண்ணும் இசையமைப்பாளரும் மகளும்!

Rambha, Santhosh Narayanan, Tamil Cinema 28-May-2022 – தமிழ் சினிமாவில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகையும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவருமான நடிகை ரம்பா குடும்பத்தினரை தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் தனது மகளுடன் சந்தித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Rambha, Santhosh Narayanan, Tamil Cinema 28-May-2022

90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்த நடிகை ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பா, அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தனது மகளுடன், ரம்பா குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

Rambha, Santhosh Narayanan, Tamil Cinema 28-May-2022 001

இரண்டு குடும்பத்தினரும் படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் அதில் சந்தோஷ் நாராயணனின் மகளான தீ பாடிய பாடல் போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.