பிக்பாஸ் நடிகைக்கு கார், வீடு என பரிசுகளை குவிக்கும் காதலர் – வைரலாகும் செய்தி!

பிரபல நடிகைக்கு காதலரால் குவியும் அதி உயர்ந்த பரிசுகள்!

Rakhi Sawant, Bigg Boss Tamil, Tamil Cinema 28-May-2022 – பிரபல பாலிவுட் நடிகையும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நடிகை ராக்கி சாவந்த், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது கணவர் ரித்தேஷ் என்பவரை பிரிவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது அவர் ஆதில்கான் துரானி என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rakhi Sawant, Bigg Boss Tamil, Tamil Cinema 28-May-2022

இந்நிலையில் காதலி ராக்கி சாவந்த்துக்கு முதலில் BMW காரை பரிசாக அளித்த ஆதில்கான், தற்போது துபாயில் அவருக்கு வீடு வாங்கி கொடுத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ராக்கி சாவந்த் கூறியபோது ‘துபாயில் எனது பெயரில் ஆதில் வீடு வாங்கி கொடுத்தது உண்மைதான். அதற்கு முன்பு BMW வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது பரிசுகளை விட அவரது அன்பு தான் எனக்கு பொக்கிஷம். அவர் என் மீது வைத்திருக்கும் உண்மையான காதல் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நேர்மையானவர் என்னை அதிகம் காதலிக்கிறார், அவரின் குடும்பத்தாருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ராக்கி சாவந்தை விட அவரது காதலர் ஆதில்கான் ஆறு வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.